உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குணக்கிரி மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருக்குணக்கிரி மலை (Thirugunagiri Malai) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் இருக்கும் ஒரு மலையாகும். இங்கு பல சிற்பங்களும் கல்வெட்டுகளும் அமைந்துள்ளன. இது தமிழ்நாடு தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.[1]

இந்த மலையின் அடிப்பகுதியிலேயே சமணச் சிற்பங்கள் உள்ளன. பெரும்பாலான இடங்களில் ஒன்றிரண்டு சமணத் தீர்த்தங்கரர் சிலைகளே காணப்படும் நிலையில் இங்கு 19 தீர்த்தங்கரர் சிற்பங்கள் வரிசையாக அமைந்துள்ளன. இச்சிற்பங்கள் எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனப்படுகிறது. மேலும் இங்கு சில கல்வெட்டுகளும் அமைந்துள்ளன. இந்த மலைமேல் சிவலிங்கத்தைப் பார்வதிதேவி பூசை செய்வது போலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.[2]

குறிப்புகள்

[தொகு]
  1. "அழியும் அபாயத்தில் திருக்குணகிரி சமணர் மலை- புடைப்புச் சிற்பங்களை சேதப்படுத்தி அட்டூழியம்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-02-18.
  2. ர.பரதவர்ஷினி. "தேனி திருக்குணக்கிரி: அழிவின் விளிம்பில் சமணர் குகை - நடவடிக்கை எடுக்குமா தொல்லியல்துறை?". www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2022-02-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருக்குணக்கிரி_மலை&oldid=3479998" இலிருந்து மீள்விக்கப்பட்டது